
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் அமீர்கான், சத்தியராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் சிக்கிடு வைப் பாடலின் ப்ரோமோ வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலானது. இப்பாடல் நாளை மாலை வெளியாக உள்ளது.
இந்நிலையில் கூலி திரைப்படத்தை இந்தி மொழியில் மஜாதூர் என தலைப்பு வைத்துள்ளனர். ஏனெனில் இந்தி மொழியில் ஏற்கனவே கடந்த 1983 ஆம் ஆண்டு அமிதாப்பச்சன் நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியானது. மேலும் வருண் தவான் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு கூலி நம்பர் 1 என்ற திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.