செய்தியாளர்களிடம் பேசிய மருது அழகுராஜா, இபிஎஸ், ஓபிஎஸ் ரேஸில் ஒரு ஐபிஎஸ் முன்னே வந்துவிட வேண்டும் என்று பாஜக ஆசைப்படுகிறது. அண்ணாமலை இடைஇடையே நடக்கிறார். தமிழகத்தில் அண்ணாமலை கிரிவலம் வருகிறார். திமுக நினைப்பதையும்,  பாஜக இணைப்பதையும் நிறைவேற்றக்கூடிய ஒருவராகத்தான் எடப்பாடி இருக்கிறார். காரணம் எடப்பாடியும்  இந்த கட்சி பிளந்தே  இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்.

மூன்றாம் இடத்தில் இருக்க கூடிய பாஜக,  முதலிடத்திற்கு  முன்னேறுவதற்கான சூழலாக இதை பார்க்கின்றது. மதுரை மாநாட்டிற்கு செல்ல வேண்டாம். அப்படி யாராவது வற்புறுத்தி உங்களை அழைத்து,  இழுத்துச் சென்றாள் ? எடப்பாடி முன்னால் நின்று கொண்டு கோஷம் போடுங்கள்.

இப்படிப்பட்ட கோபமாளித்தனர் மாநாடு நடக்கிறது. இன்றைக்கு சிவகங்கை சீமை பொறுத்தவரை எடப்பாடி, சிவகங்கைக்கு  வருகிற போது ஒரு பலத்த எதிர்ப்பு உருவானது. மதுரையில் நடக்கும் மாநாட்டிற்கு சிவகங்கையில் இருந்து அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மானம், ரோஷமுள்ள தொண்டர்கள் ஏறெடுத்து மதுரை பக்கம் பார்க்க மாட்டார்கள்.

ஒருவேளை பதவிக்கு ஆசைப்படுபவர்கள், பதவியில் இருப்பவர்கள், தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்பவர்கள், அல்லது பணப்பட்டுவாடாவுக்கு மயங்கக்கூடியவர்கள் செல்லலாம்.அவர்களின் வற்புறுத்தலின் பேரிலே  சில பேர் சென்றாலும்,  எடப்பாடி நடத்துகின்ற மாநாட்டிலேயே… அந்த மாநாட்டையே உரிமை கேட்கும் ஆர்ப்பாட்டமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.