
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு பி.எம் மெட்டீரியல் என்று தமிழ் பேராயத்தின் புறவளர் பாரிவேந்தர் புகழாரம் சூட்டியுள்ளார். காட்டாங்குளத்தூர் SRM பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரிவேந்தர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தமிழன் எப்போ வருவானோ? இந்த தமிழகத்தை எப்போ ஆள்வானோ? என்று நாம் ஏங்கிக் கொண்டிருக்கும் இந்த வேலையில் என் மனதில் பட்டதை நான் கூறுகின்றேன், அண்ணாமலை ஒரு பிஎம் மெட்டீரியல் என்று கூறினார்.
ஒரு தமிழன் இந்தியாவின் பிரதமர் ஆகும் நீண்ட கால கனவு இதன் மூலம் நிறைவேறும் எனவும், மோடி பிரதமர் ஆவார் என்பதை முதன் முதலில் சொன்னது நான்தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் இளைஞர்கள் பயன்பெற வேண்டிதான் சீமானையும், அண்ணாமலையையும் ஒரே மேடையில் ஏற்றியதாக கூறியுள்ளார்.