மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு மத்திய அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யப்பட்டு,  பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவருடைய பெயரை சூட்டியதும் அண்ணா திமுக அரசாங்கம்.

அதேபோல இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அந்த இயக்கத்தை கண்ணை இமையை காப்பது போல காத்து,  நம்மைப் போல இருக்கின்ற சாதாரண தொண்டன் கூட உருவாவதற்கு அடித்தளமிட்ட புரட்சித்தலைவி அம்மாவிற்கு புகழ் செய்கின்ற விதமாக அவருக்கு பிரமாண்டமான மெரினா கடற்கரையிலே அற்புதமான நினைவு மண்டபத்தை உங்களின் ஆதரவோடு கட்டி துவக்கப்பட்டது.

அதேபோல பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டது. அதேபோல இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு முழு வெண்கல உருவ சிலை மெரினா கடற்கரை காமராஜர் சாலை அருகே அந்த பகுதியிலே உயர்கல்வி அரங்கத்திற்கு அருகிலே மிக பிரம்மாண்டமான சிலை வைக்கப்பட்டது.

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவிற்கு அரசின் சார்பாக பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதெல்லாம் நம்முடைய தலைவிகளுக்கு தலைவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாராட்டும் புகழும்.

அதேபோல பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா இரு பெரும் தலைவர்கள் கிட்டத்தட்ட 26 அரை ஆண்டுகள் தமிழக மண்ணிலே முதலமைச்சராக இருந்து பணியாற்றினார்கள்.

அதில் அம்மாவுடைய அரசு நாலு வருடம் இரண்டு மாத காலம் ஆட்சி செய்தது. அந்த காலகட்டத்திலே பல்வேறு திட்டங்களை நாம் செயல்படுத்தினோம். பத்தாண்டு கால பொற்கால ஆட்சி என்று மக்கள் பேசப்பட்டார்கள்.

2011 செப்டம்பர் பொது தேர்தலின் போது இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள்.

ஏழை மக்களுக்கு பயன்படுகின்ற விதமாக விலையில்லா மிக்ஸி –  கிரைண்டர் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றிய ஒரே கட்சி அண்ணா திமுக கட்சி. தொட்டில் குழந்தைகள் திட்டம்,  மழை நீர் சேகரிப்பு ,  விலையில்லா  அரிசி நியாய விலை கடையில் கொடுத்தோம்

தமிழகத்தில் ஏழை – எளிய – ஒடுக்கப்பட்ட-  நசுக்கப்பட்ட – தாழ்த்தப்பட்ட –  குடும்பத்தில் பிறந்த மாணவ – மாணவிகள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.  அவ்வாறு அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர் செல்வங்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும், அறிவுபூர்வமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாண்புமிகு அம்மா அவர்கள் சிந்தனையிலே உதிக்கப்பட்ட மடிக்கணினி திட்டம் சுமார் 52 லட்சம் மாணவ – மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுத்து அவர்களை அறிவுபூர்வமான மாணவர்களாக உருவாக்கிய அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம்.

இதற்காக பல்லாயிரக்கணக்கான கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இன்றைக்கு வேளாண்மையிலே சாதனை படைத்தோம். அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய 10 ஆண்டு ஆட்சியிலே 50 ஆண்டு முன்னேற்றத்தை நாம் பார்த்தோம். விடியோ திமுகவின் இரண்டு ஆண்டு ஆட்சியிலே 20 வருடம் பின்னேற்றத்தை பார்க்கின்றோம் என தெரிவித்தார்.