
இந்தியா முழுவதும் நேற்று வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த படத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மசூதியில் இந்து முறைப்படி ஒரு தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்று உள்ளது.
இந்த வீடியோ இன்னொரு கேரளா ஸ்டோரி என்ற பெயரில் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து மனித குலத்தின் அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஏ.ஆர் ரகுமானின் பதிவுக்கு தற்போது லைக்ஸ் குவிந்து வருகிறது.
Bravo
love for humanity has to be unconditional and healing
https://t.co/X9xYVMxyiF
— A.R.Rahman (@arrahman) May 4, 2023