“ஒரு நாள் கூத்து” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகையில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தெலுங்கில் “மெண்டல் மடிலோ” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் பிறந்தார். தமிழில் அட்டகத்தி தினேஷ் உடன் ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் பிரபலமான நிவேதா பெத்துராஜ் அடுத்தடுத்து தமிழில் பல படங்கள் நடித்துள்ளார். இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சென்னையில் ஒரு சிறுவனிடம் ஏமாந்ததை குறித்து பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார்.

அதில் கூறியதாவது, அடையார் சிக்னலில் 8 வயது சிறுவன் புத்தகம் விற்பதாக கூறி 50 ரூபாய் கேட்டான். நான் ரூபாய் 100 கொடுக்க விரும்பினேன். உடனே அவன் 500 ரூபாய் தாங்க என கேட்டான். நான் கொடுக்க மறுத்ததற்கு புத்தகத்தை காருக்குள் வீசிவிட்டு என் கையில் இருந்த பணத்தை பறித்துவிட்டு சென்றுவிட்டான். இப்படி மோசமான முறையில் பிச்சை கேட்கும் பழக்கம் உண்மையா?… இது மாதிரி யாருக்கும் நடந்தது உண்டா? என்ற கேள்வியையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் கேட்டுள்ளார். நிவேதா பெத்துராஜ் இந்த பதிவு தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.