தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர்களிடம் செல்வப் பெருந்தகை கூறியதாவது, தமிழகத்தில் ஒரு கட்சி தனித்து நின்று போட்டியிடுவது மிகவும் சிரமமாகும். கடந்த 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியுடன் தி.மு.க கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதற்குக் காரணம் தி.மு.க ஆட்சிக்கு அந்த சமயத்தில் அதிக முன்னுரிமை இல்லை. மேலும் தலைவர் கருணாநிதி , பெருந்தலைவர் காமராஜர் வழியில் தமிழக மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வருவார் என்று நம்பிக்கையுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முழு நம்பிக்கையுடன் கூட்டணி அமைத்தார்.

இதன் மூலமே 2006 ஆம் ஆண்டு தி.மு.க கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. இதே சூழல்தான் இன்றும் தமிழகத்தில் நடைபெறுகிறது. ஒரு கட்சி தனித்து நின்று அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்? தமிழகத்தில் இன்றைய சூழலில் ஒரு கட்சி கூட்டணி அமைத்து வெற்றி பெற முடியும். எந்த கட்சியும் தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று வெற்றி பெற முடியாத சூழ்நிலை தான் இன்று தமிழக அரசியலில் நிலவுகிறது. இவ்வாறு பெருந்தகை கூட்டணி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.