
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி கடந்த மே 12ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரோஹித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் தனது ஓய்வை அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது ஐபிஎல் 2025 போட்டியின் போது பேட்டியில் சுரேஷ் ரெய்னா, “விராட்டின் ஓய்வு குறித்து கூறியதாவது, இந்திய கிரிக்கெட்டுக்கு விராட் தனது ஒட்டு மொத்த பங்களிப்பையும் அளித்துள்ளார். மேலும் சிறந்த கேப்டனாக பல சாதனைகளையும், வெற்றிகளையும் இந்தியாவுக்காக பெற்றுத் தந்துள்ளார்.
எனவே அவர் இந்தியாவுக்காக பல சாதனைகளை செய்ததால் அவருக்கு இந்திய அரசு “பாரத ரத்னா” விருது வழங்கி பெருமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார். இதுவரை கிரிக்கெட் விளையாட்டுக்காக பாரத ரத்னா விருது பெற்ற ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டில் தனது 40 வயதில் சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெற்றார். மிக இளம் வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற பெருமையும் சச்சின் டெண்டுல்கருக்கு உண்டு.