தனி நபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு ஏதேனும் கடன்கள் நிலுவையில் இருக்கிறதா என்பதை சரிபார்த்தல் வேண்டும். இதில் வீட்டுக்கடன்கள், இருசக்கர வாகனம் (அ) கார் கடன்கள் (அ) வேறு எவ்வித கடன்களும் இருக்கிறதா என்பதை கவனித்துக்கொண்டு கடனுக்கு விண்ணப்பிப்பது சிறந்தது ஆகும். ஏராளமான வங்கிகள் 21 வயது (அ) அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுன்தான் கடன்  வழங்கும். கடன் பெறுவதற்குரிய அதிகபட்ச வயது 58.

தனி நபர் கடனை பெறும்போது அதற்கு ஒருசில முக்கியமான கட்டணங்களை செலுத்தவேண்டி இருக்கும்.  முன்கூட்டியே செலுத்துதல் என்பது ஒரு கடனை அதன் நிலுவை தேதிக்கு முன்பு திருப்பிச் செலுத்துவதற்காக கடனாளிக்கு செலுத்தவேண்டிய கட்டணம் ஆகும்.

கடனின் வகை, நிலுவையிலுள்ள கடன் தொகை மற்றும் கடனை திருப்பி செலுத்தும் நேரத்தை பொறுத்து இந்த அபராத தொகை மாறுபடலாம். அனைத்துவித சேவைகளுக்கும் GST கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனி நபர் கடன் பெறுபவர்கள் இதற்கு GST வரி வடிவில் சிறிய கட்டணம் செலுத்தவேண்டும். கடனுக்கு ஒப்புதல் பெறும்போது (அ) அதனை திருப்பி செலுத்தும்போது இது வசூலிக்கப்படும்.