
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளியாகிய வாரிசு படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு திரையரங்கில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து நடிகர் விஜய் தன் அடுத்த படமான தளபதி 67-ல் நடிக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படம் பற்றிய அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் அவரது அடுத்த படமான தளபதி-68 குறித்த அப்டேட்கள் வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தை பிரபல இயக்குனரான அட்லீ டைரக்டு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில், தற்போது சூப்பர் அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.
#Thalapathy68 will be directed by @Atlee_dir @iamsrk @actorvijay🔥 pic.twitter.com/9IO6UnAB1Y
— Lets Cinematica (@LetsCinematica) January 27, 2023