பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ ஆன எலான் மஸ்கை சந்தித்தார். அப்போது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் பிராட்பேண்ட் சேவைகள் வழங்குவது மற்றும் டெஸ்லா கார் வணிகம் பற்றி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு டெஸ்லா நிறுவனம் மும்பையில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் டெஸ்லா கார் தொழிற்சாலை மும்பையில் அமைக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது பல்வேறு நாடுகளில் எலக்ட்ரிக் கார் விற்பனை கொடி கட்டி பறக்கும் டெஸ்லா நிறுவனம், தனது தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம் அதற்கான இடத்தை தேடி வருவதாக கூறப்படுகிறது. மேலும் மின்சார கார்கள் தயாரிக்க போதுமான  கட்டமைப்பு வசதிகள் தமிழ்நாட்டில் உள்ளது. இதனால் அங்கு டெஸ்லா ஆலை அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் தமிழ்நாட்டை போல ஆந்திரா, குஜராத் மற்றும் மும்பை போன்ற மாநிலங்களிலும் ஆலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.