சம வேலைக்கு,  சம ஊதியம் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின்னர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

மாணவர்களின் பள்ளி மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிடுமாறு இடைநிலை சங்க ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் கண்ணன் அறிவித்துள்ளார். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கைகள் பரிசீலிப்பதாக  முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

இடைநிலை ஆசிரியர்கள் எங்களை யாரும் மிரட்டவில்லை, அச்சுறுத்தவில்லை. நாங்களாகவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  ஆசிரியர்கள் நாள் போராட்டத்தை கைவிட்டு இன்று முதல் பணிக்கு திரும்புவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.