தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமணி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இதில் ரமணி வழக்கம் போல வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது திடீரென வகுப்பறைக்குள் நுழைந்த நபர் ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன அவரை சக ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டார். ஆசிரியை ரமணியே குத்தி சென்றதாக மதன்குமார் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ரமணியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் ரமணியின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த மதன்குமார் இவ்வாறு வெறி செயலில் ஈடுபட்டதாகவும் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ஆசிரியர் ரமணியை குத்தி கொலை செய்யப்பட்டதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் அரசு பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. அதோடு தாக்குதல் நடத்தியவர் மீது கடுமையாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரிய பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.