ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்த டிடிஎஃப் வாசனிடம் உங்களது திரைப்படம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அருகில் இருந்த திரைப்பட இயக்குனரை அழைத்த டிடிஎப் வாசன்,  படம் குறித்த தகவல்களை பேச சொன்னார். அப்போது பேசிய இயக்குனர்,

தம்பியோட கை எல்லாம் சரியான பிறகு திரும்பவும் பட பணிகள் ஆரம்பிக்கும். தம்பி என்னைக்கு பைக்ல விழுந்தாருன்னு உங்களுக்கு தெரியுமா சார் ? பத்திரிக்கையாளர் உங்கள கேள்வி கேட்குறேன்.  அன்னிக்கு தேதி தெரியுமா சார் ? பத்திரிகையாளர் யாராவது ஒருத்தங்க சொல்ல முடியுமா ? உங்களுக்கு தெரியுமா என்று கேட்கிறேன் ? அந்த தேதி என்னன்னு தெரியுமா ? செப்டம்பர் 17.

அது யாரோட பிறந்தநாள் தெரியுமா ? அதும் உங்களுக்கு தெரியாது. நான் தன சொல்லனுமா ? சரி ஓகே…. அது பெரியாருடைய பிறந்தநாள். தம்பி எந்த ஊர்ல கீழே விழுந்தாருன்னு  தெரியுமா ?  காஞ்சிபுரம்….  இது கேட்டா சொல்லிடுவீங்க….  காஞ்சிபுரத்தில் விழுந்தாப்ல….  பெரியார் பிறந்த தினத்திலே…  அறிஞர் அண்ணா பிறந்த மண்ணிலே….  விழுந்த ஒருவன்.

மாபெரும் தலைவனாக…. இந்த தமிழ் மண்ணிலே வருவான், வெல்வான் அன்பு தம்பி டிடிஎப் வாசன். இதுல எந்த மாற்றமும் இல்லை. தம்பிக்கு கைவலி எல்லாம் சரியான பிறகு, மீண்டும்  இந்த பட பிடிப்பு தொடங்கும்  படத்தில் எதை சொல்லி உள்ளோம் என்று படம் முடிந்த பிறகு பத்திரிக்கையாளர் நீங்க தான் விமர்சனம் பண்ணனும். எதை சொல்லி இருக்கோம் ? என தெரிவித்தார்.