சென்னையில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1519 விநாயகர் சிலைகளை மட்டும் வைத்து வழிபட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் இடங்களில் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு இடையூறாக இருப்பவர்கள் மீது சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று சென்னை பெருநகர காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி தீயணைப்புத்துறை மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியின் தடையில்லா சான்றிதத்துடன் சிலைகளை வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து வாகனங்கள் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.