சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டையில் ‘ஏ’ கிரேடு மின் உரிமத்தை புதுப்பிக்க தமிழ்நாடு மின் உரிம வாரியத்தில் ஒப்பந்ததாரர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து மூன்று மாதங்களுக்கு பிறகு மின் உரிம வாரிய செயலரை சந்தித்து ஒப்பந்ததாரர் முறையிட்டார். அப்போது மின் உரிமம் தயாராக இருப்பதாகவும், கிண்டியில் இருக்கும் கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் பெற்று கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஒப்பந்ததாரர் கிண்டி கண்காணிப்பாளர் ஸ்ரீதரை சந்தித்து உரிமத்தை கேட்டுள்ளார்.

அதற்கு செய்த பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். முதலில் ஒப்பந்ததாரர் மறுப்பு தெரிவித்து பின் 3000 ரூபாய் லஞ்சம் தருவதாக ஒப்புக்கொண்டார். இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஒப்பந்ததாரர் ஸ்ரீதரிடம் கொடுத்துள்ளார் அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஸ்ரீதரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.