மத்திய அரசாங்கம் விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி குசும் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சோலார் பம்புகளை நிறுவ மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தினால் விவசாயிகள் கவலையின்றி 25 வருடங்கள் வரை வருமானத்தை பெறலாம். இந்த திட்டத்திற்காக தங்கள் நிலங்களில் சோலார் பேனல்களை நிறுவ விவசாயிகள் 10 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும். அதன் பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகள் 60% மானிய தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்துகிறது.

இந்த திட்டத்திற்கு வங்கியில் இருந்து 30 சதவீதம் வரை கடன் கிடைக்கும். இந்நிலையில் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்க விவசாயிகளின் நிலம் துணை மின் நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்க வேண்டும். விவசாயிகள் தாங்களாகவோ அல்லது குத்தகைக்கு விடுவதன் மூலமாகவோ தங்கள் நிலங்களில் சோலார் பேனல்களை அமைக்கலாம். மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஒரு ஏக்கருக்கு 65,000 முதல் ஒரு லட்ச ரூபாய் வரை ஒவ்வொரு வருடமும் சம்பாதிக்கலாம்.