
இண்டிகோ நிறுவனம் தனது “கிராண்ட் ரன்வே பெஃஸ்ட்” சேலின் கீழ் பயணிகளுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் மூலம், பயணிகள் வெறும் ரூ.1111 முதல் விமான டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இத்துடன் பாங்க் ஆப் பரோடா மற்றும் ஃபெடரல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 15% வரை உடனடி தள்ளுபடியாகும்.
இந்த சலுகை செப்டம்பர் 30, 2024 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். பயணிகள், 2025 ஆம் ஆண்டின் ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரையிலான தங்கள் பயணத்திற்கான டிக்கெட்டுகளை இன்றிலிருந்து முன்பதிவு செய்து இந்த தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தள்ளுபடி மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்த செலவில் தரமான விமான சேவைகளை அனுபவிக்க முடியும். இண்டிகோ நிறுவனம் தனது சிறப்பு சேல்களின் மூலம் பயணிகளுக்கு மேலும் வசதியான சேவைகளை வழங்க முயற்சிக்கிறது.