
“தி லயன் கிங்” படம் தமிழகத்தில் வெளியாகி பெரும் ரசிகர் பட்டாளத்தையே குவித்தது. இந்தப் படம் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. காட்டு விலங்குகளை வைத்து அனிமேஷன் முறையில் எடுக்கப்பட்ட ஆங்கில படம் அனைத்து மொழிகளிலும் சிறப்பான வரவேற்பு பெற்றிருந்தது. இதில் முபாஷா, சிம்பா கதாபாத்திரத்திற்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முபாசா கதாபாத்திரத்தின் வாழ்க்கை வரலாறு எடுத்துக் கூறும் விதமாக தற்போது ஆஸ்கர் விருது வென்ற ஜெஃப் நதன்சன் எழுதி உள்ள திரைக்கதையை ஜென்கின்ஸ் இயக்கி உள்ளார்.
இந்தப் படத்தின் தமிழ் மொழி டப்பிங் நடிகர் அர்ஜுன் தாஸ், ரோபோ சங்கர், சிங்கம்புலி, நாசர், அசோக் செல்வன், விடிவி கணேஷ் ஆகியோர் குரலில் அட்டகாசமாக உருவாகியுள்ளது. இதேபோன்று தெலுங்கு மொழியில் மகேஷ்பாபுவின் குரலிலும், இந்தியில் ஷாருக்கான் குரலிலும் உருவாகியுள்ள “முபாசா: தி லைன் கிங்” படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ளதாக படக் குழு தெரிவித்துள்ளது.
Hakuna ̶M̶a̶t̶a̶t̶a̶ ̶ Mufasa it is !🦁The new roar 🎵
1 Month from now, get ready to watch Mufasa: The Lion King in cinemas from 20th Dec.#MufasaTheLionKing @DisneyStudiosIN pic.twitter.com/1xrA296KrS
— Arjun Das (@iam_arjundas) November 20, 2024