தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் 3 ஆண்டுகளாக சிறப்பான முறையில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திமுக என்று தங்களுடைய 75 ஆவது பவள விழாவை கொண்டாட இருக்கிறது. இந்த பவள விழாவை முன்னிட்டு இன்று ஆசிய கண்டத்துக்கே முன்னோடி திராவிட மாடல் என்ற பாடலை திமுகவினர் வெளியிட்டுள்ளனர். இந்த 3 வருட திமுக ஆட்சியில் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. குறிப்பாக புதுமைப்பெண் திட்டம், பேருந்துகளில் இலவச பயணம், மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் உரிமை தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்காகவும் மாதம் ரூபாய் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார்

 

 

அதன் பிறகு அமெரிக்கா சென்ற முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்காக 7618 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வுகளை கையெழுத்திட்டுள்ளார். இது தொடர்பாக தன்னுடைய அனுபவம் குறித்து நேற்று தன்னுடைய x பக்கத்தில் ஒரு அறிக்கையை முதல்வர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று திமுக பவள விழா நடைபெறும் இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எல்லாம் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தற்போது ஆசிய கண்டத்துக்கே முன்னோடி என்ற திராவிட பாடலை திமுகவினர் வலைதளத்தில் மிகவும் வைரலாக்கி வருகிறார்கள்.