
இந்தியன் பிரீமியர் லீக் 2025 சீசன் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை சுவாரஸ்யமாக விளையாடவில்லை. வரும் ஏப்ரல் 13ஆம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
கடந்த சீசனைப் போலவே ஹர்திக் பாண்டியாவின் தலைமையும் சாதகமான பலன்களை தரவில்லை. தற்போதைய விளையாட்டு நிலவரப்படி மும்பை அணியுடன் விளையாட்டிற்கு தயாராகும் டெல்லி அணி வலுவான நிலையில் உள்ளது. இந்நிலையில் அந்த போட்டிக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
Straight out of a 🌪️ movie#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #DCvMI pic.twitter.com/Tv7j3ILf9v
— Mumbai Indians (@mipaltan) April 11, 2025
அந்த பயிற்சியின் நடுவே விளையாட்டு மைதானத்தில் நடந்த ஒரு சுவாரசியமான தருணம் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மைதானத்தில் புழுதிப்புயல் வீசியது.
இதனால் மைதானம் முழுவதும் மண் புழுதி பறந்தது. இதனை ஓரமாக நின்று பார்த்து கொண்டிருந்த ரோஹித் சர்மா தனது சக வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேறுமாறு கைசைகை காட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் கேமராவை நோக்கி நகைச்சுவையாக செய்கை காட்டினார்.
மேலும் கேமராவை பார்த்து “இங்கு என்னதான் நடக்கிறது?” எனக் கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே ரசனையை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பான சூழ்நிலையை எட்டிய நிலையில் ரோகித்தின் இந்த அழகான நகைச்சுவை தருணம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.