தமிழக பள்ளிக்கல்வித்துறை நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களின் லிஸ்ட்டை தயார் செய்து அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. அதாவது சமீபத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தது. இதேபோன்று 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த பொது தேர்தலில் 10, 12-ம் வகுப்பில் மொழி பாடத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சண்ட் ஆகினர். இந்த விஷயத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசு பள்ளிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

இது அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்த நிலையில் பொது தேர்வுக்கு மாணவர்கள் ஏன் வரவில்லை என்று விசாரணை நடத்திய போது அந்த மாணவர்கள் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களின் லிஸ் டை தயார் செய்து வருகின்ற 2-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருப்பதற்கான காரணத்தை கண்டறிந்து அது குறித்து பெற்றோரிடம் பேசவும் முடிவு செய்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.