
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் 6 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மத்திய உணவு இடைவெளியில் 3 பூரியையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டுள்ளார். இதனால் அந்த மாணவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது இதனை கண்ட சக மாணவர்கள் பள்ளியின் ஊழியரிடம் தெரிவித்தனர் விஷயத்தை அறிந்த பள்ளியின் ஊழியர்கள் சிறுவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தையிடமும் தகவலை தெரிவித்தனர். தகவலை அறிந்த பெற்றோர்கள் உடனே மருத்துவமனைக்கு சென்று தன் மகனை பார்த்து உள்ளார். மருத்துவர்கள் அதிகம் முயற்சி செய்தும் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. மூச்சுத்திணறல் காரணமாக சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சோகத்தில் சிறுவனின் தந்தை 3 பூரியை ஒரே நேரத்தில் சாப்பிட என்ன காரணம்? இதற்கான விளக்கத்தை அளிக்குமாறு பள்ளி ஊழியர்களிடம் கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்துள்ளார். மேலும் 11 வயது சிறுவனுக்கு பள்ளியில் நடந்த இச்சம்பவம் அனைத்து பெற்றோர்களுக்கும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.