இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளங்களாக பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படும் இந்து பண்டிகைகள் மற்றும் மத நிகழ்வுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஜனவரி 12, 2025 அன்று பிரயாக்ராஜில் உள்ள புனித மகாகும்பமேளாவிற்கு செல்லும் வழியில் தப்தி-கங்கா எக்ஸ்பிரஸில் இருந்த யாத்ரீகர்கள் மீது மகாராஷ்டிராவின் ஜல்காவ்ன் அருகே கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.

வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல், இந்து கொண்டாட்டங்களுக்கு எதிராக அதிகரித்து வரும் விரோத சம்பவங்களுடன் தொடர்புடையது. இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் உலகளவில் போற்றப்படும் நிகழ்வான மஹாகும்பிற்குச் செல்லும் யாத்ரீகர்கள் முற்றுகையிடப்பட்டனர். ம்காகும்பமேளாவிற்கு யாத்ரீகர்களை ஏற்றிச் செல்லும் ரயில்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பாதிக்கப்பட்டவர்கள் பிரதமர், ரயில்வே அமைச்சர் மற்றும் மாநில அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர். பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் பேசிய நபர், திடீரென நாங்கள் கற்களால் தாக்கப்பட்டோம், கண்ணாடி உள்நோக்கி உடைந்திருந்தால், அது எங்களுக்கு பலத்த காயத்தை ஏற்படுத்தியிருக்கும். உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் கோருகிறோம்.” இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல. 2024 ஆம் ஆண்டில் இதேபோன்ற தாக்குதல்கள் நடந்தன, அப்போது சமூக விரோத சக்திகள் அயோத்தி மற்றும் பிற மதத் தலங்களுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் செல்லும் ரயில்களை குறிவைத்தன. இந்த தாக்குதல் ஆன்மீக நிகழ்வுகளின் மீது அதிகரிக்கும் விரோதத்தை வெளிக்காட்டுகிறது.