ஸ்டார்லிங் என்பது அமெரிக்க விண்வெளி நிறுவனம். இது செயற்கைக்கோள் அடிப்படையில் ஆன இணைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்த ஸ்டாலின் நிறுவனம் சுமார் 13 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு இணைய சேவையை வழங்கும் ஒரு சர்வதேச தொலை தொடர்பு நிறுவனம்.

இந்நிலையில் ஸ்டார்லிங் நிறுவனம் இந்தியாவில் இணைய சேவையை வழங்குவதற்காக அனுமதி பெற காத்திருந்தது. தற்போது இந்திய தொலைத்தொடர்பு துறையிடமிருந்து கடந்த வாரம் “குளோபல் மொபைல் பர்சனல் கம்யூனிகேஷன் பை சாட்டிலைட்” என்ற உரிமத்தை பெற்றுள்ளது.

இதன்பின் இந்தியாவில் இணைய சேவைகளை வழங்க ஸ்டார்லிங் நிறுவனம் தகுதி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் அடுத்த 2 மாதங்களுக்குள் தனது சேவையை தொடங்க உள்ளதாக ஸ்டார்லிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் இணைய சேவையை பெற விரும்பும் பயனர்கள் முதலில் ரூபாய் 33 ஆயிரத்திற்கு ஸ்டார்லிங் நிறுவனத்தின் கருவியை வாங்க வேண்டும். பின்னர் மாதம் தோறும் ரூபாய் 3000 கட்டணத்தை செலுத்தி அன்லிமிடெட் இணைய சேவை பெற முடியும் என தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்டார்லிங்க் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் ஆவதால் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு டிஷ் வாங்கும் பயனர்களுக்கும் ஒரு மாதம் இணைய சேவை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.