சிவகங்கை கீழடியில் 18 சித்தர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு, மூத்த பா.ஜ.க நிர்வாகி ஹெச். ராஜா வருகை தந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, சட்டப் பேரவையில் ஆளுநர் உரை அன்று ஆளுநர் மட்டுமே பேச வேண்டும். இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலின் பேசியது மரபு கிடையாது. Stalin is more dangerous than Karunanidhi என ஒரு வருடத்திற்கு முன்பாகவே நான் சொன்னேன்.

இப்போது முதல்வர் ஸ்டாலின் அதை நிரூபித்து கொண்டிருக்கிறார். He is most immature Chief Minister என்பது நிரூபணமாகி இருக்கிறது. சட்டப் பேரவையில் ஆளுநர் உரையின்போது முதல்வர் பேசியது மரபு அல்ல. முதல்வர் தனது நடவடிக்கைக்கு மன்னிப்பு கேட்பார், தன்னை திருத்திக்கொள்வார் என பா.ஜ.க நினைக்கிறது எதிர்பார்கிறது” என்று அவர் பேசினார்.