இலங்கையின் புதிய அதிபராக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றதையடுத்து, நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தை கலைத்து, புதிய தேர்தலை அறிவிக்கப்படவுள்ளது என்ற கருத்து நிலவுகின்றது. இதனால் இலங்கையின் அரசியல் நிலைமை மிக முக்கியமான திருப்பத்தை நோக்கி நகரும் என்று கணிக்கப்படுகிறது.

அதிபர் பதவியேற்ற சில நாட்களிலேயே அநுர குமார திசாநாயக்க, அரசியலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கத்தில் இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தை கலைப்பது மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியாகக் காணப்படுகிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை திசாநாயக்க எடுத்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

நாளை மக்களுக்கிடையே உரையாற்ற உள்ள அநுர குமார திசாநாயக்க, புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என கூறப்படுகிறது.