சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளு குடிப்பட்டி வேடங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த ஆண்டு வெளிமாநில பறவைகளான கொக்கு, நாரை, உன்னி கொக்கு, குளத்து கொக்கு, முக்குளிப்பான் போன்ற பறவை இனங்கள் வருகை தந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திலேயே ஒரே ஒரு சரணாலயமாக இருக்கக்கூடிய இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றி சீமை கருவேலை மரங்களும், நாட்டு கருவேலை மரங்களும் இருக்கிறது.

அதனை அப்புறப்படுத்தி இனிவரும் காலங்களில் பறவை இனங்கள் வெகு தூரம் இரைக்காக செல்வதை தவிர்க்கும் பொருட்டு பழ வகை மரக்கன்றுகளையும் அடர்ந்த வனங்கள் போன்றவற்றையும் அந்த பகுதியில் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.