திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று வார விடுமுறை நாளை முன்னிட்டு வழக்கத்தை விட இரு மடங்கு பக்தர்கள் அதிகமாக கோவிலுக்கு வருகை தந்தனர்.

இந்நிலையில் ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி, மயில் காவடி எடுத்து ஆடியபடி கிரி வீதியில் வலம் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் ரோப்கார், மின் இழுவை ரயில் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசனம் செய்கின்றனர்.