தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு உதவும் நோக்கத்தோடு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. டிஎன்பிடிஎஸ் என்ற பக்கத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொருட்கள் வேண்டாம் என்றால் தங்களது அட்டையை பொருட்களில் இல்லாத அட்டையாக மாற்றிக் கொள்ள முடியும்.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் தங்களது அட்டை வகையை மாற்ற இங்கே கிளிக் செய்யவும் என ஒரு வாசகம் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்யும்போது அடுத்த பக்கத்திற்கு செல்லும் அப்போது நியாய விலை கடையில் கொடுக்கப்பட்ட மொபைல் நம்பரை பதிவு செய்து அதற்கு கீழே இருக்கும் கேப்சாவை பதிவு செய்ய வேண்டும். இதனை அடுத்து மொபைல் எண்ணிற்கு ஓடிபி வந்தவுடன் அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் குடும்ப அட்டை மாற்றம் தொடர்பான பக்கத்திற்கு செல்லும். அதில் குடும்ப அட்டை எண் நியாய விலை கடை குறியீடு போன்றவை கொடுக்கப்பட்டிருக்கும். அதன் கீழே அட்டை வகை மாற்றம் என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் குடும்ப அட்டை முடக்கவும், தடை நீக்கம் செய்வதற்கும், முகவரி மாற்றத்திற்கும் என பல காலங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் அட்டை வகை மாற்றம் என்ற காலத்தை குறிக்க வேண்டும்.

சர்க்கரை ஆட்டையாக இருந்தால் சர்க்கரை அட்டை என பதிவு செய்யப்பட்டிருக்கும். அரிசி அட்டையாக இருந்தால் அரிசி அட்டை எனப்பதிவு செய்யப்பட்டு இருக்கும். பண்டகம் எல்லாம் அட்டை என்றால் பண்டகம் இல்லா அட்டை என பதிவு செய்யப்பட்டிருக்கும். நமக்கு தேவையானதை பூர்த்தி செய்து அதன் கீழ் இருக்கும் பகுதியை ஓகே செய்ய வேண்டும். அப்படி செய்தால் உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்வார்கள். தங்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும் ரேஷன் கார்டு வழங்கப்படும்.