தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் மெரினா படத்தில் கதாநாயகனாக தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இதனையடுத்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் தனது 21 வது படத்தில் ராணுவ வீரராக நடித்து வருகிறார். சமீபத்தில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் தனது 23-வது படத்தின் பூஜையிலும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

நடிகர்கள் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவிற்குள் நுழைந்த போது எடுத்த புகைப்படங்கள் பல வருடங்களுக்கு பிறகு வைரலாகும். அந்த வகையில் கடந்த 2008-ஆம் ஆண்டு அஜித் நயன்தாரா நடிப்பில் ஏகன் திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு காட்சியில் மட்டும் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.