
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான நிலையில் சமீரா ரெட்டி மற்றும் திவ்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட்டான நிலையில் குறிப்பாக அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல பாடல் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர் ஒருவர் வெளியிட்ட வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பதிவிட்ட நபர் 10 வருடத்திற்கு முன்பாக ஹோமாவிலிருந்து எழுந்து வந்தவர் பேசுகிறார் என்ற கேப்ஷனோடு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதாவது வாரணம் ஆயிரம் படத்தில் அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல பாடலுக்கு நடிகர் சூர்யா ஆடும் போது ஒரு ஹோட்டலில் சாப்பாடு தட்டுகளை தட்டி விடுவார். இது மிகவும் தவறு என்றும் அந்த உணவை நீங்கள் சாப்பிட்டிருக்கலாம். உங்களுக்கு சாப்பிட விருப்பமில்லை எனில் வேறு யாருக்காவது கொடுத்திருக்கலாம். அப்படி இல்லை எனில் ஹோட்டலில் வேலை பார்க்கும் ஒருவருக்கே கொடுத்து இருக்கலாம். அல்லது தெருவில் செல்லும் நாய்க்காவது கொடுத்திருக்கலாம். இப்படி எதையுமே செய்யாமல் நீங்கள் அந்த உணவை வீணாக்கி விட்டீர்கள். இந்த சம்பவத்திற்கு நீங்கள் மன்னிப்பு தெரிவித்து வீடியோ வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் படத்திற்காக எடுக்கப்பட்ட அந்த வீடியோவை விமர்சித்து ரசிகர் ஒருவர் இப்படி பேசிய நிலையில் அதற்கு பலரும் தங்கள் கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram