சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதில் மூன்று தரப்பு வாதங்கள் முக்கியமான வாதங்களாக நீதிபதி முன்பு எடுத்து வைக்கப்பட்டது.

அதில், சிபிஐ என்ன சொல்லி இருக்கிறது என்றால் ? நவம்பர் மாதத்திற்குள் சாத்தான்குளத்தினுடைய  வழக்கு விசாரணை நிறைவடையும் என தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் தந்தை – மகன் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட   நிலையில்,  விசாரணையின் போது காவல்துறையினர் தாக்குதலில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர்  ஸ்ரீதர்,  உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன்,  ரகு கணேஷ்,  தலைமை காவலர்கள் உள்ளிட்ட 9 பேரை CBI காவல்துறை கைது செய்து,  சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்டம் முதலாவது நீதிமன்றத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல் ஆய்வாளராக இருக்கக்கூடிய ஸ்ரீதர் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக தான் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், தந்தை – மகன் இறப்புக்கும்,  தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.

தற்போது எனக்கு உடல்நல குறைவு காரணமாக மிகுந்த சிரமம் அடைந்திருப்பதாகவும்,  எனவே தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். எனவே தமக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது CBI  தரப்பில் வழக்கினுடைய விசாரணைக்காக சிபிஐ நீதிபதி தற்போது தான் நியமிக்கப்பட்டு, இந்த வழக்கு விசாரணை வேகம் எடுத்து இருக்கிறது. இதில் கிட்டத்தட்ட ஏராளமான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக இன்னும் சில சாட்சியங்கள்  விசாரணை செய்ய ப்பட வேண்டும். இந்த வழக்கு நவம்பர் மாதத்திற்குள் விசாரணை முழுமையாக நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை தாமதப்படுத்துவதற்காக மனுதாரர் ஏராளமான மனுக்களை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார் என வாதிட்டார். மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  இந்த வழக்கினுடைய தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து இருக்கிறார்.