
தமிழ் நடிகை ஸ்ருதி நாராயணுக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகை கோபமாகவும், வருத்தமாகவும் தனது பதில்களை பதிவிட்டுள்ளார். தனக்கு முற்றிலும் தனிப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோ, தன்னிடம் அனுமதி இல்லாமல் பகிரப்பட்டுள்ளதை கண்டித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, அந்த வீடியோவை பகிர வேண்டாம் என்றும், இது தனக்கும், தன்னுடைய குடும்பத்தினருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 2 ஸ்டோரி பதிவுகளில், அவர் முதலில், “உங்களுக்கு இது ஒரு காமெடி கலந்த வீடியோவாக இருந்தாலும், எனக்கும், என் நெருங்கியவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலைமை எங்களுக்குள் கையாள முடியாத அளவுக்கு கடுமையானது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நானும் ஒரு பெண் தான். எனக்கும் உணர்வுகள் இருக்கின்றன. உங்கள் தாய், சகோதரி, காதலியின் வீடியோவை இப்படி பார்ப்பீர்களா? அவர்களும் பெண்ணே! என சாடியுள்ளார். அடுத்த பதிவில், இந்த வீடியோவிற்கு எதிரான விமர்சனங்களை கடுமையாக விமர்சித்துள்ள ஸ்ருதி நாராயணன், “ஒரு நபரின் வாழ்க்கை இது. உங்களது பொழுதுபோக்குக்காக அல்ல. பலரும் பாதிக்கப்பட்டவரைத் தான் குற்றவாளியாகக் காட்டுகிறீர்கள். ஆனால் இந்த வீடியோக்களை வெளியிடும் அல்லது பார்ப்பவர்களை யாரும் கேள்வி கேட்கவில்லை என்று கூறினார்.