டெல்லியில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது நம்முடைய நாட்டின் பெயரை இந்தியா என்று அழைக்கக்கூடாது. நம் நாட்டை ‘பாரத்’ என்று தான் கூற வேண்டும் என்று தெரிவித்தார். இந்தியா என்பது ஆங்கில பெயராகும். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நம்முடைய நாட்டின் பெயர் பாரத் என்றால் இந்திய அரசியலமைப்பு, இந்திய ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் போது வழங்கப்பட்ட காலனித்துவ பேரான இந்தியாவை இன்னும் ஏன் பயன்படுத்துகிறார்கள். இதை நாம் மாற்ற வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவரின் இந்தியா வெர்சஸ் பாரத் என்ற கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பேசினார். அப்போது நமது நாடு பாரத், இந்தியா மற்றும் இந்துஸ்தான் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நாட்டை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். இந்திய விமானப்படை, இந்திய ராணுவம் என்று தான் அழைக்கிறோம். மேலும் சாரே ஜஹான் சே அச்சா இந்துஸ்தான் ஹுமாரா பாடலையும் பாடுகிறோம் என்று தெரிவித்தார்.