மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) மீதான வட்டி விகிதத்தை அரசு உயர்த்தவில்லை. தொடர்ந்து 14-வது காலண்டாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. ஏப்ரல் 1-ம் தேதி முதல் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பொது வருங்கால பைப்பு நிதி திட்டத்தில் ஏப்ரல் -ஜூன் காலாண்டுகான வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.

கடந்த 13 காலாண்டுகளாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில் தற்போது 14-வது முறையாக வட்டி விகிதத்தில் அரசு மாற்றம் செய்யவில்லை. தற்போது பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 7.1% வட்டி விகிதத்தை வைத்திருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இது தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.