அண்மையில் ஆசிரியர் ஒருவரின் வருங்கால வைப்பு நிதி(பிஎஃப்) கணக்கிலிருந்து ரூ.80,000 மோசடி செய்யப்பட்டது. மும்பையை சேர்ந்த 32 வயதான பெண் ஆசிரியை, பிஎஃப் அலுவலகத்தின் தொடர்பு எண்ணை ஆன்லைனில் தேடிக்கொண்டிருந்த போது ​​மோசடி செய்பவர் வலையில் சிக்கினார். மோசடி செய்பவர் PF அலுவலக ஊழியர் போன்று காட்டிக்கொண்டு ஆசிரியரிடம் AirDroid செயலியை பதிவிறக்கம் செய்து அவரது கணக்கு எண் மற்றும் MPIN-ஐ உள்ளிடுமாறு தெரிவித்தார். இதையடுத்து மோசடி செய்பவர் அவரது கணக்கை அணுகியதும், அவர் 16 பரிவர்த்தனைகளை செய்து ரூ.80,000 அவரது கணக்கிற்கு மாற்றினார்.

இச்சம்பவம் சென்ற வாரம் மதியம் நடந்தது. அதன்பின் பாதிக்கப்பட்டவர் ஏப்ரல் 6-ம் தேதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுபோன்ற மோசடிகளை தவிர்ப்பதற்கு ஆன்லைனில் தேடும்போது அதிகாரப்பூர்வமான வலைத்தளங்களிலிருந்து தொடர்பு எண்களை பெறுவது முக்கியம் ஆகும். PF கணக்கு வைத்திருப்போர் PF குறித்த எந்த வேலைக்கும் EPFO-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் (அ) கிளையை பார்க்க வேண்டும். எந்தவொரு செயலியையும் பதிவிறக்கும் முன்னதாக அதனை சரிபார்த்து நம்பகத்தன்மையை ஆராய வேண்டியது அவசியம்.

ஆதார் அட்டைகள் (அ) வேறு ஏதேனும் ஆவணங்களை பயன்படுத்துதல், உணவு, வேலைகள், எதையும் வாங்குதல்-விற்பது மற்றும் வேறு ஏதேனும் கவர்ச்சிகரமான செயல்களுக்கு இது பொருந்தும். ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தும்போது கவனத்துடன் செயல்படுவது மற்றும் பல வகையான மோசடிகள் பற்றி எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். இந்த வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் வாயிலாக ஆன்லைன் மோசடிகளுக்கு இரையாவதை தவிர்த்து நிதி இழப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.