இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும் நிலையில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் அதிக அளவில் வெப்ப அலை வீசுவதால் தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் போன்றவற்றுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப் பட்டுள்ளது.

ஒடிசாவில் பல்வேறு பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ்க்கும் மேல் வெப்பநிலை இருப்பதாக புவனேஸ்வர் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது மாணவ மாணவிகளுக்கு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் எப்போது கோடை விடுமுறை வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் கடும் வெப்ப அலையின் காரணமாக மாணவர்களின் உடல் நலனுக்கு எந்தவித தீங்கும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்திற்காக அரசு தற்போது 5 நாட்கள் விடுமுறை வழங்கியுள்ளது. மேலும் அதன்படி ஏப்ரல் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.