
இரானி கோப்பை தொடரின் டெஸ்ட் போட்டி லக்னோவில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கிடையே நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்தது. அதில் சர்பராஸ் கான் 222 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி அணியின் ரன் குவிப்பு நிலையை உறுதியாக்கினார். முதல் நாள் ஆட்டத்தில் லேசான காய்ச்சல் இருந்ததால் ஷர்துல் தாக்கூர் ஓய்வு எடுத்தார்.
இதனையடுத்து 2-வது நாள் ஆட்டத்தில் ஷர்துல் தாக்கூர், 102 டிகிரி காய்ச்சலுடன் போராடி, 9 ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கி 36 ரன்கள் அடித்தார். காய்ச்சலுடன் இருப்பதால் அவரின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. உடனே அவர் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ குழு துரிதமாகச் செயல்பட்டு, அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து பார்த்தனர். அதன் பிறகு சிகிச்சை முடிந்து ஷர்துல் நலமானார். அவர் உடல்நலக்குறைவால் இப்போட்டியில் முதல் இன்னிங்சில் பந்துவீச்சை மேற்கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.