உலகம் முழுவதும் உள்ள பெண்களில் எட்டில் ஒருவர் 18 வயது அடைவதற்கு முன்பே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை குழந்தைகள் பாதுகாப்பு  அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது. சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று ஐநா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகில் தற்போது உள்ள பெண்களில் 37 கோடி பேர் பாலியல் பலாத்காரம் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்ற விவரத்தை ஐநா வெளியிட்டுள்ளது. அதோடு உடல் ரீதியாக இல்லாமல், இணைய வழியில் 65 கோடி பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

சகாரா ஆப்பிரிக்காவில் 7.9 கோடி பெண்களும் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 7.15 கோடி பெண்களும், மத்திய மற்றும் தெற்கு ஆசிய பகுதிகளை சேர்ந்த 7.3 கோடி பெண்களும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 6.8 கோடி பெண்களும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய பகுதிகளில் 4.5 கோடி பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களில் 14 முதல் 17 வயதுடைய சிறுமிகளை அதிகம் ஒருமுறை துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் மீண்டும் துன்புறுத்தப்படுவதால் அவர்களது மனரீதி மற்றும் உடல் ரீதியான தாக்கம் நீங்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மன அழுத்தம், மனசோர்வு பாலியல் ரீதியாக பரவும் தொற்று நோய்கள் போன்றவற்றால் அவதிப்படும் இவர்கள் போதை பொருட்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் மட்டுமில்லாமல், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 24 முதல் 31 கோடி பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளோர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.