இந்திய அரசியல்வாதியான மகுவா மொய்த்திரா. இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆவார். இவர் கடந்த ஜூன் 3ஆம் தேதி தனது 50ஆவது வயதில் பினாகி மிஸ்ரா (65) என்பவரை ஜெர்மனியில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இவருக்கு டென்மார்க்கை சேர்ந்த பைனான்சியரான லார்ஸ் பிரான்ஸ் என்பவரோடு  திருமணம் ஆகி பின்னர் விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது இரண்டாவதாக பிஜு ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பினாகி மிஸ்ராவை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஜெர்மனியில் ரகசியமான முறையில் கேக் வெட்டி, நடனமாடி தங்களது திருமண விழாவை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக உள்ளது. அந்தத் திருமணத்தில் இருவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்று உள்ளனர்.

தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள வீடியோவில் பாலிவுட் பாடல் ஒன்றிற்கு இருவரும் நடனம் ஆடியுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் அந்த புதிய ஜோடியை வாழ்த்தி வருகின்றனர்.