சென்னை மாவட்டத்தில் உள்ள காரப்பாக்கத்தில் அரவிந்த் தருண் ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழ்கடல் பயிற்சியாளர். வழக்கமாக அரவிந்த் குடியரசு மற்றும் சுதந்திர தினம் அன்று ஆழ்கடலில் இறங்கி தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுவார். இந்நிலையில் சந்திராயன்-3 விண்கலம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்கி சாதனை படைத்ததால் இந்திய விஞ்ஞானிகளை பாராட்ட அரவிந்த் புது விதமாக முயற்சி செய்தார்.

அதாவது பள்ளி மாணவர்களான கீர்த்தனா, ஜான், நிஸ்வீக், தாரகை ஆகிய நான்கு பேருடன் அரவிந்த் 10 கிலோ எடையுள்ள விக்ரம் லேண்டர் போன்று தயாரித்து தேசிய கொடியுடன் சென்னை நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் கடலில் 45 அடி ஆழத்திற்குள் இறங்கியுள்ளார். பின்னர் அவர்கள் லேண்டர் மாதிரியை கடலுக்கு அடியில் வைத்து சந்திராயன் விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்து சென்ற புகைப்படத்துடன் விஞ்ஞானிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.