சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து கன்னங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராஜேந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கன்னங்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே சென்ற போது பள்ளி சீருடை அணிந்து சென்ற மாணவன் மீது எதிர்பாராதவிதமாக பேருந்து பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த மாணவன் கன்னங்குறிச்சியில் வசிக்கும் கட்டிட தொழிலாளி நடராஜனின் மகன் கவேஸ்(12) என்பது தெரியவந்தது.

இந்த சிறுவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த கணேஷ் ஜாமண்டரி பாக்ஸை பள்ளியில் வைத்து விட்டேன். அதனை எடுத்து வருகிறேன் என தனது தாய் கௌரியிடம் கூறி விட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு பேருந்து மோதி மாணவன் இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.