எஸ்பிஐ வங்கியின் கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்து, கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை 48 மணிநேரத்திற்குள் தானாகவே திரும்ப பெறப்படாவிட்டால் வாடிக்கையாளர் 2 வழிகளில் புகாரளிக்கலாம். UPI பணப் பரிவர்த்தனை ஒரு வேளை தோல்வியடைந்து உங்களது தொகை திருப்பி தரப்படவில்லை எனில், யோனோ லைட் ஆப் வழியே நீங்கள் புகாரை பதிவுசெய்யலாம். இதற்கு நீங்கள் செயலியின் “பேமெண்ட் ஹிஸ்டிரி”-க்கு செல்லவும். அதன்பின் தோல்வியடைந்த பரிவர்த்தனையை தேர்ந்தெடுக்கவும்.

அதனை தொடர்ந்து “Raise Dispute” என்பதை தேர்ந்தெடுத்து உங்களது புகாரை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். செயலியில் பணம் செலுத்துதல் குறித்த புகாரை அளித்த பிறகு பரிவர்த்தனை விபரங்களையும் அனுப்பலாம். உங்களது விவரங்களை [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். நீங்கள் பணம் செலுத்திய தேதி, தொகை மற்றும் 12 இலக்க பரிவர்த்தனை குறிப்பு எண்ணை அனுப்பவும். பணத்தை திரும்ப பெறுதல் குறித்த சிக்கல்களுக்கு நீங்கள் RRN அதாவது மீட்டெடுப்பு குறிப்பு எண்ணை அனுப்பலாம்.