நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக whatsapp வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை பயன்படுத்தி கணக்கு இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மென்ட் ஆகியவற்றை சரிபார்க்க முடியும். கூடுதலாக வங்கி வாடிக்கையாளர்கள் யோனோ செயலியில் உள்நுழையாமல் மினி ஸ்டேட்மெண்டுக்கு ஏடிஎம்க்கு செல்லாமல் தங்களுக்கு தேவையான தகவல்களை பெறலாம். எஸ்பிஐ whatsapp வங்கி முறையை எஸ்எம்எஸ் அல்லது ஆன்லைன் முறையில் செயல்படுத்தலாம். அதற்கான செயல் முறையை எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bank.sbi என்பதில் பார்க்கலாம்.

உங்களின் மொபைலில் qr குறியீட்டை ஸ்கேன் செய்து எஸ்பிஐ வழங்கும் சேவைகளை பெற முடியும்.

உங்களின் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து 9022690226 என்ற எண்ணுக்கு ஹாய் என்று அனுப்பிய பிறகு chat bot வழங்கும் வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

எஸ்பிஐ வாட்ஸப் வங்கி அமைப்பை எஸ்எம்எஸ் மூலமாக செயல்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 7208933148 என்ற எண்ணுக்கு wareg account number என எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு வாட்ஸ் அப் உறுதிப்படுத்துதல் செய்தியை பெறுவீர்கள். பின்னர் 9022690226 என்ற வாட்ஸ் அப் எண்ணில் இருந்து அனுப்பியதும் வழிமுறைகள் பின்பற்றப்படும்.