இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து குஷி என்ற படத்தில், பாலிவுட்டில் சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். மயோசிடிஸ் என்னும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது நோயில் இருந்து மீண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த சமந்தாவும் நாக சைதன்யாவும் திடீரென விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது இரண்டாவது திருமணம் செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சாமியார் சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிவுரையின் படி சமந்தா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த நல்ல செய்தி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை தெரியவில்லை.