
திருமணம் மீதான எதிர்பார்ப்பு தற்போது மணமக்கள் வீட்டாருக்கு அதிகமாகி வருகிறது. இதேபோன்று உத்திரபிரதேச மாநிலத்தில் ஃப்ருக்காபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் ஒன்று நடைபெற இருந்தது. இந்த நிலையில் மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் நிச்சயதார்த்தத்தை திடீரென நிறுத்தி உள்ளனர். இதுகுறித்து விசாரித்த போது மணமகன் அரசு வேலை இல்லாததே காரணம் எனக் கூறியுள்ளனர்.இதனால் மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.
இருப்பினும் மணமகனின் குடும்பத்தார் மற்றும் மணமகன் ஆகியோர் மணமகன் தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருப்பதாகவும், மாதம் 1.2 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுவதாகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பெண் வீட்டார் அரசு வேலை இல்லாததால் நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். அரசு வேலை உள்ள மாப்பிள்ளையை தான் கல்யாணம் செய்வேன் என மணப்பெண் கூறியதால் நிச்சயதார்த்த நிகழ்வில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது.