
வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதியன்று தெலுங்கில் தயாராகிய ‘சாகுந்தலம்” திரைப்படமும், ஏப்ரல் 28-ம் தேதி தமிழில் “பொன்னியின் செல்வன்-2” படமும் பான் இந்தியா படங்களாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் சாகுந்தலம் படத்தில் சாகுந்தலை எனும் சரித்திரக் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து உள்ளார். அதேபோல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்ற சரித்திர கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்து உள்ளார். இருவருமே சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.
த்ரிஷா முதன்முறையாக சரித்திரக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் படம் இது. அதேபோல் சாகுந்தலம் படத்தின் வாயிலாக முதல் முறையாக சரித்திரக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமந்தா. இவர்கள் இருவரது புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு அதிக லைக்குகளை குவித்து வருகிறது.