தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய கடைசி திரைப்படம் ஆகும். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வெளியான சச்சின் திரைப்படம் அப்போதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ரீரிலீஸ் செய்யப்படுவது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியிருந்தார். இந்த படத்தை கலைப்புலி தானு தயாரித்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் பாலாஜி, வடிவேலு, ரகுவரன் போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக இருப்பதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக நடிகை ஜெனிலியாவும் தனது தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.