
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ராவில் ஆசிரியர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் மதுராவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். படிப்பில் பின் தங்கிய மாணவர்களை தனது வீட்டில் வைத்து பாடம் நடத்தி வந்தார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பின் தங்கிய 4 மாணவர்களை படிக்க வைப்பதற்காக வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது மாணவர் ஒருவர் வைத்திருந்த மொபைல் போனில் ஆசிரியர் குளிப்பதை அவருக்குத் தெரியாமல் படம் பிடித்துள்ளார்.
அந்த வீடியோவை ஆசிரியரிடம் காட்டி வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார். மேலும் தன் நண்பர்களுக்கும் அந்த வீடியோவை அனுப்பி உள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியர் தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சித்துள்ளார். இந்த செய்தி வெளியான நிலையில் நான்கு மாணவர்களையும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் கூறியதாவது, ஆசிரியர்கள் மரியாதைக்குரியவர்கள் அவர்களை அவமரியாதை செய்வது குற்றமாகும். தற்போதைய இளைஞர்களிடையே தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக தகாத வீடியோக்களை பதிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை காவல்துறையினர் பெற்றோர்கள் கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.